தேசிய செய்திகள்
இந்திய ராணுவத்திற்கு முதற்கட்டமாக 120 புதிய பாலிஸ்டிக் ஏவுகணைகள் வாங்க திட்டம்
- 120 பாலிஸ்டிக் ஏவுகணைகள் வாங்க இந்திய ராணுவத்திற்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஏவுகணைகள் வெகு விரைவில் தயாரிக்கப்பட்டு இந்திய – சீன எல்லையில் தயார் நிலையில் நிறுத்தப்படும் என்று பாதுகாப்பு அமைச்சக வட்டாரம் தெரிவித்துள்ளது.
- இந்த ஏவுகணைகள் முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நிலத்தில் இருந்து மற்றொரு நில இலக்கை தாக்கக்கூடிய புதிய தலைமுறை ‘பிரளய்’ ஏவுகணை 150 முதல் 500 கி.மீ. தூரம் சென்று இலக்குகளைத் தாக்கக்கூடியது. இந்த ஏவுகணை இந்திய உந்துவிசை ஏவுகணை திட்டத்தின்கீழ், பிருத்வி ஏவுகணையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதாகும்.
சர்வதேச செய்திகள்
உலகின் சிறந்த க்யுசீன் (Cuisine) விருதுகள் 2022
- உலகின் மிகச்சிறந்த உணவு வகைகளை கொண்ட நாடுகளின் பட்டியலை டேஸ்ட் ஆப் அட்லஸ் என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது.
- இந்த தரவரிசையானது பொருட்கள், உணவுகள் மற்றும் பானங்களின் பார்வையாளர்களின் மதிப்பீடுகளின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது.
- இப்பட்டியலில்
- உலகின் சிறந்த க்யுசீனாக முதலிடத்தில் இத்தாலி இடம்பெற்றுள்ளது.
- இரண்டாம் இடத்தில் கிரெக்கம்,
- மூன்றாம் இடத்தில் ஸ்பெயின்,
- நான்காம் இடத்தில் ஜப்பான் மற்றும்
- ஐந்தாவது இடத்தில் இந்தியா இடம்பெற்றுள்ளது.
மாநில செய்திகள்
மேற்கு வங்காளத்தின் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் தொடங்கப்படவுள்ளது
- டிசம்பர் 30,2022 அன்று மேற்கு வங்கத்தின் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். ஹவுரா-புதிய ஜல்பைகுரி வழித்தடத்திற்கு இடையே இந்த ரயில் இயக்கப்படுகிறது.
- இது நாட்டின் கிழக்குப் பகுதிகளில் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ஆகும். இதுவரை, நாட்டில் மொத்தம் ஆறு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படுகின்றன. அவை
- டெல்லி-வாரணாசி,
- காந்திநகர்-மும்பை சென்ட்ரல்,
- பிலாஸ்பூர்-நாக்பூர்,
- புது தில்லி-அண்டௌரா,
- டெல்லி-ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ரா,
- சென்னை-மைசூரு
ஹைதராபாத்தில் மிதானி (MIDHANI wide plate) பரந்த தட்டு ஆலை திறக்கப்படவுள்ளது
- ஹைதராபாத்தில் (MIDHANI wide plate) பரந்த தட்டு ஆலையை இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு டிசம்பர் 27, 2022 அன்று திறந்து வைப்பார்.
- பரந்த தட்டு ஆலை வசதி, தேசிய மூலோபாய திட்டங்களுக்கான சிறப்பு எஃகு தகடுகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் மற்றும் இறக்குமதி மாற்றீடுகளை எளிதாக்கும் வகையில் அமைக்கப்படவுள்ளது.
- MIDHANI – Mishra Dhatu Nigam Limited
நியமனங்கள்
நேபாளத்தின் புதிய பிரதமராக பிரசண்டா நியமனம் செய்யப்பட்டுள்ளார்
- 275 உறுப்பினா்கள் கொண்ட நேபாள நாடாளுமன்றத்துக்கு கடந்த மாதம் 20-ந் தேதி தேர்தல் நடைபெற்றது இதில் ஆட்சி அமைக்கத் தேவையான 138 இடங்களை எந்தக் கட்சியும் பெறவில்லை.
- இந்நிலையில் சிபிஎன் மையத்தின் தலைவா் புஷ்ப கமல் தஹல் ‘பிரசண்டா’ புதிய அரசை அமைக்க 165 உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதால் ‘பிரசண்டா’ மூன்றாவது முறையாக நேபாளத்தின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- அரசியலமைப்பு 76ஆவது பிரிவு 2ஆவது உட்பிரிவின் படி நேபாளத்தின் பிரதமராக பிரசண்டா நியமிக்கப்பட்டுள்ளார்.
கலிபோர்னியாவில் முதல் முறையாக நகர மேயர் பதவிக்கு சீக்கியர் தேர்வு செய்யபட்டுள்ளார்
- அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லோடி நகரத்தின் 117-வது மேயராக மைக்கி ஹோத்தி என்ற சீக்கியர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- இந்நிலையில் கலிபோர்னியாவில் நகர மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ள முதல் சீக்கியர் என்ற பெருமையை மைக்கி ஹோத்தி பெற்றுள்ளார். முன்னதாக கடந்த ஆண்டு வரை துணை மேயராக பணியாற்றி வந்துள்ளார் மேலும் இவர் இந்தியாவை பூர்வீகத்தைக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
விளையாட்டு செய்திகள்
தேசிய பெண்கள் குத்துச்சண்டை போட்டி
- 6வது எலைட் மகளிர் தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள் மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்று வருகிறது.
- இந்நிலையில் டிசம்பர் 26, 2022 அன்று நடைபெறும் இறுதி போட்டியில் நிகாத் ஜரீன் (50 கிலோ பிரிவு), லவ்லினா (75 கிலோ) மற்றும் 8 ரெயில்வே வீராங்கனைகளும் ஆகியோர் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
ஆசிய கோப்பை வில்வித்தை போட்டி
- ஆசிய கோப்பை வில்வித்தை போட்டியில் இந்திய ஆடவர் அணி தங்கப்பதக்கம் வென்றுள்ளது. பிரியன்ஸ், ஓஜாஸ், கணேஷ்ராவ் ஆகியோர் அடங்கிய இந்திய ஆடவர் அணி தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளது.
- மேலும் இப்போட்டியில் 5 தங்கம் ,3 வெள்ளி பதக்கங்கள் மற்றும் 1 வெண்கல பதக்கம் என மொத்தம் 9 பதக்கங்களை வென்றுள்ளது.
உலக டென்னிஸ் லீக்’ போட்டி
- ஐக்கிய அரபு அமீரகத்தில் முதல் முறையாக முன்னணி டென்னிஸ் வீரர், வீராங்கனைகள் அணி அணியாக பங்கேற்ற ‘உலக டென்னிஸ் லீக்’ போட்டி நடந்தது.இப்போட்டியில் வீரர்கள், வீராங்கனைகள் மொத்தம் 4 அணிகளாக பிரிக்கப்பட்டனர்.
- டிசம்பர் 19, 2022 ம் தேதி முதல் ஒற்றையர், இரட்டையர், கலப்பு இரட்டையர் ஆட்டங்களாக போட்டி நடத்தப்பட்டது. லீக் சுற்று முடிவில் முதல் 2 இடங்களை பிடித்த ஹாக்ஸ்-கைட்ஸ் அணிகளுக்கு இடையிலான இறுதி ஆட்டத்தில் ஹாக்ஸ் அணி வெற்றிப் பெற்று முதல் சாம்பியன் பட்டத்தை வென்றது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, ஷேன் வார்னை கவுரவிக்கும் வகையில் ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரர் விருதை மறுபெயரிட்டுள்ளது
- ஆஸ்திரேலியாவின் ஆண்களுக்கான சிறந்த டெஸ்ட் வீரர் விருதை , புகழ்பெற்ற சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னைக் கௌரவிக்கும் வகையில் மறுபெயரிடப்பட்டுள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் 27 டிசம்பர் 2022 அன்று அறிவித்தது.
- ஷேன் வார்னே ஆண்களுக்கான சிறந்த டெஸ்ட் வீரர் விருது ஆண்டுதோறும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் விருதுகளில் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
2022ல் அதிக ரன்கள் எடுத்த ஷ்ரேயஸ் ஐயர்
- இந்திய மிடில் ஆர்டர் பேட்டர் ஸ்ரேயாஸ் ஐயர் இந்த ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் நாட்டின் முன்னணி ரன் குவித்தவர் என்ற இடத்தைப் பிடித்துள்ளார்.
- 2022-சர்வதேச கிரிக்கெட்டில் 1609 ரன்கள் எடுத்து அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் ஷ்ரேயஸ் ஐயர். டெஸ்டுகளில் 422 ரன்களும் ஒருநாள் கிரிக்கெட்டில் 724 ரன்களும் டி20யில் 463 ரன்களும் எடுத்துள்ளார்.
முக்கிய தினம்
வீர் பால் தினம் 2022
- ஜனவரி 9, 2022 அன்று ஸ்ரீ குரு கோவிந்த் சிங்கின் பிரகாஷ் பூராப் தினத்தன்று, டிசம்பர் 26 ஆம் தேதி வீர் பால் தினமாக அனுசரிக்கப்படும் என்று பிரதமர் அறிவித்தார்.
- ஸ்ரீ குரு கோவிந்த் சிங்கின் மகன்களான சாஹிப்ஜாதாஸ் பாபா ஜோராவர் சிங் மற்றும் பாபா ஃபதே சிங் ஆகியோரின் தியாகத்தைக் குறிக்கும் வகையில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
- டெல்லியில் உள்ள மேஜர் தயான் சந்த் தேசிய மைதானத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் வீர் பால் திவாஸ் நிகழ்ச்சி கொண்டாடப்படவுள்ளது.
சுனாமி நினைவு தினம்
- இந்தோனேசியாவில் உள்ள சுமத்ரா தீவு கடல் பகுதியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால், சுனாமி என்னும் ஆழிப்பேரலை 2004 ஆம் ஆண்டு ஏற்பட்டு சுமார் 14 நாடுகளில் கடலோரப் பகுதிகளை மிக மோசமாக தாக்கியது.
- இந்தியா, இந்தோனேசியா, இலங்கை, மாலத்தீவு, தாய்லாந்து, மலேசியா உள்பட 14 நாடுகளில் கரையோரம் இருந்த 2 லட்சத்து 29 ஆயிரத்து 866 பேர் உயிரிழந்தனர். தற்போது இந்த தினத்தை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் 26 அன்று சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.
தொற்றுநோய்க்கான சர்வதேச தயார்நிலை தினம்
- ஐக்கிய நாடுகள் சபையும் உலக சுகாதார அமைப்பும் (WHO) டிசம்பர் 27ஆம் தேதியை தொற்றுநோய்க்கான சர்வதேச தயார்நிலை தினமாக அறிவித்து, இத்தினம் முதன்முதலில் டிசம்பர் 27, 2020 அன்று முதல் அனுசரிக்கப்படுகிறது.
- தொற்றுநோய்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.