வேலைவாய்ப்பு விவரங்கள்:
வெஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் (WCL) நிறுவனமானது Mining sirdar ,Surveyor பணிகளுக்கான வேலைவாய்ப்பு ஒன்றை அறிவித்துள்ளது . இந்த பணிக்காக 135 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது 18 முதல் 30 க்குள் இருப்பது அவசியம்.மேலும் வயது வரம்பு பற்றிய தளர்வுகளை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு சென்று காணவும்.
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் 10 ஆம் வகுப்பு ,Diploma in Mining ,Diploma in surveying போன்ற பதவி சார்ந்த படிப்புகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் .விண்ணப்பதாரர்களுக்கு அவர்களின் பதவியின் தகுதிக்கேற்ப ரூ.31,853 முதல் ரூ.34,392 வரை மாதம் ஊதியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு /ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் முறை மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. UR/ OBC/ EWS ஆகிய பிரிவினை சேர்ந்தவர்கள் மட்டும் ரூ.1180 விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். இதர பிரிவினருக்கு கட்டணம் தேவை இல்லை.மேலே குறிப்பிட்டுள்ள தகுதிகளை பெற்ற விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் உள்ள படிவத்தை நிரப்பி 10.02.2023 தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.