வேலைவாய்ப்பு விவரங்கள்:
இந்தியாவின் ஆயுள் காப்பீட்டு நிறுவனமான Life Insurance Corporation(LIC) நிறுவனமானது Apprentice Development Officers(ADO) பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் கீழ் மொத்தம் 9394 ADO காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதில் தமிழகத்திற்கு மட்டும் 1516 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 21 வயது நிரம்பியவராகவும் மற்றும் 30 வயதை தாண்டாதவராகவும் இருப்பது கட்டாயம்.
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு UG Degree முடித்திருக்க வேண்டும். ADO ஆக பணியமர்த்தப்படும் நபர்களுக்கு ரூ.35,650 முதல் ரூ.90,205 வரை மாதம் ஊதியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் பிரிலிம்ஸ் தேர்வு,முதன்மைத் தேர்வு,நேர்காணல் ஆகிய செயல்முறைகளுக்கு பின் இப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.