யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன்( UPSC ), Indian Forest Service Examination பணிக்கென 150 காலிப்பணியிடங்கள் தற்போது ஒதுக்கப்பட்டு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியுள்ள நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகின்றன. மேலும் வேலை பற்றிய தகவல்கள் கீழே வழங்கப்பட்டுள்ளன.
UPSC வேலைவாய்ப்பு:
தற்போது Indian Forest Service Examination பணிக்கென 150 காலிப்பணியிடங்கள் இருப்பதாக யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன்( UPSC ) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் வயது வரம்பு குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 32 வயது வரை இருக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Graduate முடித்திருக்க வேண்டும் மற்றும் இப்பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாத ஊதியம் தகுதி மற்றும் திறன் பொறுத்து அளிக்கப்படும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்கள், SC, ST, PwBD விண்ணப்பதாரர்கள் தவிர மற்ற பிரிவினரிடமிருந்து விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 வசூலிக்கப்படும்.
Indian Forest Service Examination பணிக்கு தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 21/02/2023 தேதி முடிவதற்குள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.