திருநெல்வேலி மாவட்டத்தில் மகேந்திரகிரியில் அமைந்துள்ள இஸ்ரோ (ISRO) உந்துவிசை வளாகத்தில் (IPRC) Apprentice பயிற்சி வகுப்பிற்கான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. மேலும் ஊக்கத்தொகையுடன் கூடிய இந்த பயிற்சி வகுப்பு குறித்த முழு விவரங்களை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொண்டு பயன் பெறுங்கள்.
ISRO-ன் பயிற்சி அறிவிப்பு விவரங்கள்:
ISRO Propulsion Complex தொழிற்பயிற்சி திட்டத்தின் கீழ் ஊக்கத்தொகையுடன் கூடிய பயிற்சி வகுப்பிற்கான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. Technician Apprentices வகுப்பிற்கு 41 காலிப்பணியிடமும், Graduate Apprentice (Engineering) வகுப்பிற்கு 44 காலிப்பணியிடமும், Graduate Apprentice (Non Engineering) வகுப்பிற்கு 15 காலிப்பணியிடங்களும் என மொத்தமாக 100 காலிப்பணியிடங்கள் ஒதுக்கபட்டுள்ளது. மேலும் Graduate Apprentice (Non Engineering) வகுப்பிற்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வயதானது 28 ஆகவும், இதர வகுப்பிற்கு விண்ணப்பித்தவர்களின் வயது 35 ஆகவும் இருக்க வேண்டும்.
மேலும் இந்த பயிற்சி வகுப்பில் சேர்வதற்கு விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் Technician Apprentices, Graduate Apprentice (Engineering) வகுப்பிற்கு BE / Diploma / Library Science-ல் தேர்ச்சியும், Graduate Apprentice (Non Engineering) வகுப்பிற்கு ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் UG தேர்ச்சியும் பெற்றிக்க வேண்டும். மேலும் Technician Apprentices பணிக்கு மாதம் ரூ.8000 உதவித்தொகையும், இதர பணிக்கு மாதம் ரூ.9000 உதவித்தொகையும் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த பயிற்சி வகுப்பிற்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கூறிய தகுதிகளை பெற்ற நபர்கள் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்த பின்னர், விண்ணப்ப படிவத்துடன் ஆவணங்களை இணைத்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.