சரக்கு காரிடார் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (DFCCIL) நிறுவனத்தில் தற்போது காலியாக உள்ள Junior Manager பதவிக்காக ஒதுக்கட்டுள்ள பல்வேறு காலிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
DFCCIL-ன் வேலைவாய்ப்பு விவரங்கள்:
DFCCIL நிறுவனமானது, Junior Manager பதவிக்கான காலிப்பணியிடத்தை நிரப்ப முடிவு செய்துள்ளது. எனவே இந்நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு காலிப் பணியிடங்களுக்கு திறமையான பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு காலியிடம் நிரப்ப பட உள்ளது. மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் அதிகபட்ச வயதானது 55 ஆக இருக்க வேண்டும்.
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் மத்திய அல்லது மாநில அரசில் அரசு அதிகாரியாகவும், pay Level 7 முதல் 8 அளவிலான ஊதியம் பெறுபவராகவும் இருக்க வேண்டும். மேலும் இப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்களுக்கு Parent pay plus deputation allowance ஊதியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Junior Manager பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் பிரதிநிதித்துவம் (Deputation) அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்கள். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அதிகாரப்பூர்வ பக்கத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்த பின்பு, அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள முகவரிக்கு அறிவிப்பு வெளியான 15 நாட்களுள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.