Union Bank Of India தற்போது Manager பணிக்கென காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு 42 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு ஆர்வமுள்ள மற்றும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் இறுதி தேதி முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.
Union Bank வேலைவாய்ப்பு:
Union Bank Of India தற்போது Chief Manager, Senior Manager, Manager உள்ளிட்ட பணிகளுக்கு 42 காலியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு அல்லது அரசு சார்ந்த கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் Degree ,CAIIB ,MBA (Finance), CMA , அல்லது CA, CFA ,CS ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது.
மேலும் பணிக்கு தேர்ந்தெடுக்கும் நபர்களுக்கு Chief Manager பணிக்கு குறைந்த பட்சமாக ரூ .76010 மற்றும் அதிகபட்சமாக ரூ. 89890 மாத ஊதியமும், Senior Manager பணிக்கு குறைந்தபட்சம் ரூ.63840 மற்றும் அதிகபட்சமாக ரூ .78230 ஊதியமும் மற்றும் Manager பணிக்கு குறைந்தபட்சம் ரூ.48170 மற்றும் அதிகபட்சமாக ரூ. 69810 ஊதியமும் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்களுக்கு குறைந்தபட்ச வயதானது 22 என்றும் அதிகபட்ச வயதானது 40 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் விண்ணப்பிக்கும் நபர்களுக்கு விண்ணப்பபடிவ கட்டணம் OBC பிரிவினருக்கு ரூ 850 மற்றும் SC , ST மற்றும் PWBD பிரிவினருக்கு ரூ 150 ஆகும். பணிக்கு தகுதியுள்ள நபர்கள் Online Examination மற்றும் Personal Interview மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து 12/02/2023 தேதிக்குள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்குமாறு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.