CSIR நிறுவன வேலைவாய்ப்பு:
தற்போது CSIR – (CECRI) நிறுவனம் Scientist , Senior Technical Officer மற்றும் Technical Assistant உள்ளிட்ட பணிகளுக்கு 20 காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு சார்ந்த கல்லூரி அல்லது பல்கலைக்கழங்கங்களில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு Scientist பணிக்கு ரூ.1,04,487 மாத ஊதியமாகவும், Senior Technical Officer பணிக்கு ரூ.87,435 ஊதியமாகவும், Technical Assistant ரூ.54,522 ஊதியமாகவும் வழங்கப்படும் என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. விண்ணப்பிப்பவர்களுக்கு வயது வரம்பு Scientist பணிக்கு அதிகபட்சம் 32 என்றும் Senior Technical Officer பணிக்கு அதிகபட்சம் 45 என்றும் Technical Assistant பணிக்கு 28 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.