RBI நிறுவனம் தற்போது மருத்துவ ஆலோசகர் (BMC) பணிக்கு ஒரே ஒரு காலியிடம் இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்முகத்தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.பணிக்கு தகுதியுள்ள நபர்கள் இறுதி தேதி முடிவதற்குள் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
RBI வேலைவாய்ப்பு:
தற்போது ரிசர்வ் வங்கி ( RBI) வெளியிட்டுள்ள அறிவிப்பில் , வங்கியின் மருத்துவ ஆலோசகர் பணிக்கென ஒரே ஒரு காலியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.1000 ஊதியமாக வழங்கப்படும் என்றும், விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் பணியில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அதிகாரபூர்வ தளத்தில் உள்ள அலுவலக முகவரிக்கு தங்களது பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவத்துடன் தேவையான சான்றிதழ்களை இணைத்து 13 /02 /2023 தேதிக்குள் தபால் அனுப்புமாறு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.