இந்திய கடலோர காவல் படையானது General Duty (GD),Technical (Engineering) போன்ற பதவிகளுக்கான 71 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த பணி குறித்த கூடுதல் விவரங்களை விரிவாக இந்த பதிவில் காணலாம்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
இந்திய கடலோர காவல் படையானது General Duty (GD), Commercial Pilot License (SSA), Technical (Engineering), Technical (Electrical/ Electronics), Law Entry போன்ற பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை அறிவித்துள்ளது. இந்த பதவிகளுக்காக மொத்தம் 71 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வயதானது குறைந்தபட்சமாக 21 முதல் அதிகபட்சமாக 29 வரை இருக்க வேண்டும்.அதாவது 1994-2002 ஆண்டிற்குள் பிறந்தவராக இருப்பது அவசியம்.
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் 12 ஆம் வகுப்பு ,BE,LAW, Any Degree போன்ற பணி சார்ந்த படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பணியாளர்களுக்கு அவர்களின் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.மேலே குறிப்பிட்டுள்ள தகுதிகளை பெற்ற நபர்கள் அதிகாரபூர்வ தளத்தில் உள்ள படிவத்தை பெற்று படிவத்தை நிரப்பி ஆன்லைன் மூலம் 09.02.2023 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.கடைசி தேதிக்கு பின் அனுப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது.