ராணிப்பேட்டை, பொது சுகாதாரத்துறை மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை மாவட்ட நலவாழ்வு சங்கமானது பல் மருத்துவர் ,செவிலியர்,மருந்தாளுநர் போன்ற பல்வேறு பதவிகளுக்கான 65 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த பணி குறித்த கூடுதல் விவரங்களை விரிவாக இந்த பதிவில் காணலாம். 02.02.2023 தேதி வரை மட்டுமே விண்ணப்பங்கள் பெறப்படும்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
பொது சுகாதாரத்துறை மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை மாவட்ட நலவாழ்வு சங்கமானது ஒப்பந்த அடிப்படையிலான பல் மருத்துவர்,செவிலியர்,இடைநிலை சுகாதார பணியாளர், நகர சுகாதார செவிலியர் தரவு உள்ளீட்டாளர்,பல் மருத்துவர், உதவியாளர்,MPHW,மருந்தாளுநர்,சு
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களின் 8th ,12th (with botany zoology ) B,.sc nursing ,B.sc dental surgery ,ANM, GNM ,DIPLOMA IN PHARMACY,B.sc maths , போன்ற பணி சார்ந்த படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.இந்த பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பணியாளர்களுக்கு அவர்களின் கல்வித் தகுதிக்கேற்ப மாதம் ஊதியம் ரூ.8000 முதல் ரூ.35,000 வரை வழங்கப்படுகிறது.
இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் விருப்பம் உள்ள நபர்கள் விண்ணப்படிவத்தை அதிகாரபூர்வ தலத்தில் பெற்று, பூர்த்தி செய்த விண்ணப்பங்களுடன் தகுந்த ஆவணங்களை இணைத்து அதிகாரபூர்வ தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு நேரில் சென்றோ அல்லது தபால் மூலமோ 02.02.2023 தேதி மாலை 5 மணிக்குள் அனுப்ப வேண்டும்.இறுதி நாளுக்கு பிறகு அனுப்பப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ தளத்தைப் பார்வையிடவும்.