தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கிவரும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு Out Of Reach Worker பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரருக்கு வயதுவரம்பு அதிகபட்சம் 40 இருக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் விண்ணப்பிக்கும் நபர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது. பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு மாத ஊதியமாக ரூ.10,592 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பணிக்கு தகுதியுள்ள நபர்கள் நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் கீழே உள்ள அலுவலக முகவரிக்கு தகுந்த சான்றிதழ்களுடன் அனுப்பி வைக்குமாறு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
District Child Protection Unit,
1 76, Muthusurabi Building,
Mani nagar 2nd street, Palai Road,
Thoothukudi 628 003.