Ujjivan வங்கியானது டிகிரி முடித்த பட்டதாரிகளுக்காக தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் இந்த வங்கியில் காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. மேலும் Credit Officer-Housing Loan பதவிக்காக பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இந்த பணி குறித்த கூடுதல் விவரங்களை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொண்டு உடனே விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
உஜ்ஜீவன் வங்கியில் காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடத்தை நிரப்புவதற்காக, தற்போது இந்த வங்கியானது 2023 ஆண்டிற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டு Credit Officer பதவிக்கு திறமை வாய்ந்த நபர்களை கொண்டு காலிப்பணியிடத்தை நிரப்ப உள்ளது.
இந்நிலையில் இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் கவர்மெண்ட் அனுமதி பெற்ற கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு டிகிரியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் MFI அல்லது வங்கித்துறையில் 1 வருட முன்னனுபவமும், MS-Office, computer knowledge, Income tax analysis போன்றவற்றில் நன்கு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பணியாளர்களுக்கு அவர்களின் பணியின் அடிப்படையில் அவர்களின் தகுதி மற்றும் திறமைக்கேற்ப ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணிக்கு உஜ்ஜிவன் வங்கியால் நடத்தப்படும் நேர்முகத் தேர்வின் மூலம் பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். மேற்கூறிய தகுதிகளை பெற்ற ஆர்வம் உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரியின் மூலம் படிவத்தை பெற்று பூர்த்தி செய்த பின்பு, விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். மேலும் கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ பக்கத்தைப் பார்வையிடவும்.