MOEF வேலைவாய்ப்பு விவரங்கள்:
சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகமானது, தற்போது வனத்துறையில் ஆலோசகர் மற்றும் ஆராய்ச்சி அசோசியேட் பதவிக்கான 3 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக, வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டு, காலியாக உள்ள பணியிடத்தில் தகுதியான பணியாளர்களை பணியமரத்தப்படவுள்ளது. எனவே Consultant-பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வயதானது அதிகபட்சமாக 40 வயதாகவும், Research Associate-பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வயதானது அதிகபட்சமாக 35 வயதாகவும் இருப்பது கட்டாயம்.
மேலும் இப்பணிக்கு அரசு சார்ந்த மற்றும் அரசு அனுமதி பெற்ற பல்கலைக்கழகங்களில் பணிக்கு சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் Phd/PG Degree போன்ற பட்டம் பெற்றிருக்க வேண்டும். MOEF அமைச்சகத்தின் மூலம் தகுந்த பணியாளர்களாக தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு மாதம் குறைந்த பட்சமாக ரூ.40,000 முதல் அதிகபட்சமாக ரூ.60,000 வரை ஊதியம் வழங்கப்படுகிறது.
எனவே இப்பணிக்கு மேலே கூறிய தகுதிகளை பெற்ற நபர்கள் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு, ஆன்லைன் எழுத்து தேர்வு மற்றும் தனிப்பட்ட நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று தகுந்த ஆவணங்களுடன், பூர்த்தி செய்த பின்பு கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அறிவிப்பு வெளியான 21 நாட்களுக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.