தற்போது நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி நிறுவனம் , Chief Resource Person, Senior Resource Person உள்ளிட்ட பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் விரைவாக இறுதி தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் இதனை பற்றிய தகவல்கள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன.
NIELIT நிறுவன வேலைவாய்ப்பு:
நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி நிறுவனம் தற்போது வெளியிட்ட அறிவிப்பின்படி, Chief Resource Person, Senior Resource Person, Data Entry Operators, Resource Person பணிகளுக்கு 20 க்கும் மேற்பட்ட காலியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பு அதிகபட்சம் 40 ஆக இருக்க வேண்டும் என்றும் அறிவித்துள்ளது.
மேலும் அறிவிப்பில் இந்த பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் B.E, B.Tech, MCA, M.Sc, மற்றும் M.E, M.Tech, M.S போன்ற ஏதேனும் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. NIELIT பணிகளுக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அவர்களின் பணியின் அடிப்படையில் ரூ.25,000/- முதல் ரூ.80,000 வரை மாத ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இப்பணிகளுக்கு தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் மற்றும் விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அலுவலக முகவரிக்கு 07 /02 /2023 தேதிக்குள் விரைவாக அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.