இந்தியாவின் தனித்துவ அடையாள ஆணையத்தின் (UIDAI) கீழ் உள்ள NISG நிறுவனம், Assistant Manager பணிக்கு பல்வேறு காலியிடங்கள் உள்ளதால் அவ்விடங்களை நிரப்புவது குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் இப்பணி குறித்த கூடுதல் தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
UIDAI NISG வேலைவாய்ப்பு:
UIDAI NISG வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Assistant Manager பணிக்கு என்று பல்வேறு காலியிடங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வயது வரம்பு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து அறிந்து கொள்ளவும்.
மேலும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் B.E, B.Tech, MBA போன்ற பட்டப் படிப்புகளில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும் மற்றும் Assistant Manager பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ரூ.4 லட்சம் முதல் ரூ.9 லட்சம் வரை ஆண்டு ஊதியம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
UIDAI NISG பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் நியமனம் செய்யப்படுவார்கள். பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள தளத்தின் மூலம் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து விரைவாக விண்ணப்பிக்குமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.