நாகப்பட்டினம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் புறத்தொடர்பு பணியாளர் பணிக்கு ஒரே ஒரு காலியிடம் மட்டும் உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் விரைவாக இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவிக்கப்படுகிறது.
தமிழக அரசு வேலைவாய்ப்பு:
நாகப்பட்டிணம் மாவட்டம் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் புறத்தொடர்பு பணியாளர் பணிக்கு ஒரு காலியிடம் மட்டும் உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்களின் வயது வரம்பு பற்றி அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்துக்கொள்ளவும்.
மேலும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு சார்ந்த கல்வி நிறுவனங்களில் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி அடைந்திருத்தல் வேண்டும் மற்றும் களப்பணியில் அனுபவம் பெற்றவராகவும் இருக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்பவர்களுக்கு மாத ஊதியம் ரூ.10,592/- அளிக்கப்படும் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புறத்தொடர்பு பணியாளர் பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் முறையில் நியமிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு 08/03/2023 அன்று சேரும்படி தபால் அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.