SBI Mutual Fund நிறுவனமானது, Relationship Manager பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் இப்பணிக்கு ஒரே ஒரு காலியிடம் மட்டும் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. எனவே பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் விரைவாக விண்ணப்பித்து பயன்பெறலாம்.
SBI Mutual Fund வேலைவாய்ப்பு:
Relationship Manager பணிக்கு ஒரே ஒரு காலியிடம் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளதாக SBI Mutual Fund வெளியிட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் பணிக்கு விண்ணப்பிப்பவர்களின் வயது வரம்பு பற்றிய தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை கண்டு தெரிந்து கொள்ளவும்.
மேலும் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு சார்ந்த பல்கலைக்கழகங்களில் பணி சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் Post Graduate முடித்திருக்க வேண்டும் மற்றும் விண்ணப்பிப்பவர்கள் 3 முதல் 5 ஆண்டுகள் வரை பணி அனுபவம் கொண்டவராக இருக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது. SBI Mutual Fund நிறுவனத்தின் பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாத ஊதியம் தகுதி மற்றும் திறன் அடிப்படையில் அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
Relationship Manager பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் Personal Interview மூலம் நியமிக்கப்படுவார்கள். பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள தளத்தின் மூலம் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து விரைவாக இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.