இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்( IOCL), Junior Engineering Assistant, Junior Quality Control Analyst, Junior Material Assistant, Junior Nursing Assistant ஆகிய பணிகளுக்காக 500 க்கும் மேற்பட்ட காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த பணிகள் குறித்து கூடுதல் தகவல்கள் கீழ்கண்ட பதிவில் காணலாம்.
IOCL வேலைவாய்ப்பு:
Junior Engineering Assistant, Junior Quality Control Analyst, Junior Material Assistant, Junior Nursing Assistant உள்ளிட்ட பணிகளுக்கென்று 513 காலியிடங்கள் இருப்பதாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்( IOCL) வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருந்தது. மேலும் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 26 வரை இருக்கவேண்டும் என்று அறிவித்துள்ளது.
மேலும் இந்த பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் 10 ஆம் வகுப்பு, ITI, Diploma, Degree ஆகிய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி அடைந்திருத்தல் வேண்டும் மற்றும் இப்பணிகளுக்கென தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாத ஊதியம் தகுதி மற்றும் திறன் அடிப்படையில் அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
IOCL நிறுவனத்தின் பணிக்கு தகுதியானவர்கள் Written Test, Proficiency, Physical Test (SPPT) மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள். பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள தளத்தின் மூலம் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து ஆன்லைன் முறையில் 20/03/2023 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.