IDBI வங்கியில் Assistant Manager பணிக்கென 600 காலியிடங்கள் இருப்பதால் அவ்விடங்களை தகுதியான நபர்களை கொண்டு நிரப்பும் பொருட்டு அறிவிப்பு ஒன்றை IDBI வங்கி வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் விரைவாக இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்கவும்.
IDBI வங்கி வேலைவாய்ப்பு:
Assistant Manager பணிக்கு 600 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக சமீபத்தில் IDBI வங்கி வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 30 வரை இருக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும், SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் தளர்த்தப்பட்டுள்ளது.
மேலும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு சார்ந்த கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் டிகிரி தேர்ச்சி வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் விண்ணப்பதாரிகள் சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தது 2 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.36000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.
Assistant Manager பணிக்கு தகுதியுடையவர்கள் Online Test (OT), Document Verification (DV), Personal Interview (PI) and Pre Recruitment Medical Test ஆகிய தேர்வுகளின் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள். விண்ணப்ப படிவ கட்டணமாக SC/ST/PWD பிரிவினருக்கு ரூ.200/-, மற்றவர்களுக்கு ரூ.1000/- வசூலிக்கப்படும் மற்றும் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் IDBI வங்கியின் அதிகாரப்பூர்வ தளத்தின் மூலம் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் பிப்ரவரி 17 முதல் பிப்ரவரி 28 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.