மத்திய அரசின் UCIL நிறுவனம் தற்போது, Medical Officer பணிக்கு ஒரு காலியிடம் மட்டும் இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. எனவே பணிக்கு தகுதியுள்ள நபர்கள் விரைவாக விண்ணப்பித்து வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
UCIL நிறுவன வேலைவாய்ப்பு:
UCIL நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, Medical Officer பணிக்கென ஒரே ஒரு காலியிடம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு வயது வரம்பு அதிகபட்சம் 65
என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் அரசு அல்லது அரசு சார்ந்த கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் PG Degree அல்லது MBBS முடித்திருக்க வேண்டும். இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாத ஊதியம் குறைந்தபட்சம் ரூ.88,600/- முதல் அதிகபட்சம் ரூ.1,06,320/- வரை அளிக்கப்படும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் Medical Officer பணிக்கு தகுதியுள்ள நபர்கள் 07 /02 /2023 அன்று நடைபெறும் நேர்முகத் தேர்வில் தேர்வு செய்யப்படுவார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரபூர்வ தளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து தகுந்த சான்றிதழ்களுடன் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.