சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) நிறுவனத்தில் காலியாக உள்ள Chief Vigilance Officer பதவிக்கு வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை CMRL நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் தகுந்த பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு Chief Vigilance Officer பதவிக்கு ஹையரிங் செய்யப்பட உள்ளார்கள்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
Chief Vigilance Officer பதவிக்காக ஒதுக்கப்பட்டுள்ள 1 காலிப்பணியிடத்தை நிரப்புவதற்காக CMRL நிறுவனம் தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் மூலமாக தகுதியான பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு காலியாக உள்ள பணியிடம் நிரப்பப்பட உள்ளது. இந்நிலையில் இந்த Chief Vigilance Officer பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது 01.04.2023 அன்று அதிகபட்சமாக 56 க்குள் இருக்க வேண்டும்.
இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள நபர்கள் Organized Group A சேவைகளை சேர்ந்த அதிகாரியாக இருக்க வேண்டும், மேலும் அவர்கள் Senior Executive Grade (SAG) level-லின் அடிப்படையில் ஊதியம் பெறுபவராக இருக்க வேண்டும். இந்த பணிக்கு CMRL நிறுவனத்தால் தேர்ந்தெடுக்கப்படும் ஊழியர்களுக்கு அவர்களின் தகுதிக்கேற்ப மற்றும் பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும்.
இந்நிலையில் இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் உள்ள மற்றும் மேற்கண்ட தகுதிகளை பெற்ற நபர்கள் பிரதிநிதித்துவம் (Deputation) அடிப்படையில் CMRL நிறுவனத்தால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க உள்ள நபர்கள் அதிகாரபூர்வ தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள லிங்க் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பின்பு விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் படிவத்தில் self attested செய்த documents-யை இணைத்து HR-க்கு அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 25.04.2023 தேதிக்குள் அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.