பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட் (BECIL) நிறுவனத்தில் Junior Technical Officer, Office Assistant, Speech & Swallow Therapist போன்ற பதவிக்கான காலிப்பணியிடங்கள் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
BECIL வேலைவாய்ப்பு:
பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட் (BECIL) நிறுவனம் காலியாக உள்ள 8 காலிப்பணியிடத்தை நிரப்புவதற்கான முடிவை எடுத்துள்ளது. இதற்கான அறிவிப்பின் மூலம் Junior Technical Officer, Office Assistant, Speech & Swallow Therapist போன்ற பதவிகளுக்கான காலிப்பணியிடங்கள் திறமை வாய்ந்த ஊழியர்களை கொண்டு நிரப்பப்பட உள்ளது.
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் B.U.M.S (யுனானி மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை இளங்கலை) மற்றும் M.Sc, Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணி சார்ந்த துறைகளில் 2 வருட முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். BECIL ஆணையத்தால் தகுதியான பணியாளராக தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு அவர்களின் பணியின் அடிப்படையில் மாத ஊதியமாக குறைந்தபட்சமாக ரூ.25,000 முதல் அதிகபட்சமாக ரூ.60,000 வரை வழங்கப்படுகிறது.
இந்நிலையில் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வின் மூலமாக ஒப்பந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட தகுதிகளை பெற்ற நபர்கள் அதிகாரப்பூர்வ பக்கத்தில் படிவம் பெற்று பூர்த்தி செய்த பின்பு ஆன்லைன் மூலம் 07.02.2023 மற்றும் 09.02.2023 ஆகிய தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.