யுரேனியம் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனம், Laboratory Assistant பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் விரைவாக இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறவும்.
UCIL நிறுவன வேலைவாய்ப்பு:
தற்போது யுரேனியம் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில் Laboratory Assistant பணிக்கு 6 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு வயது வரம்பு UR/EWS பிரிவினருக்கு 25 வயது, OBC (NCL) பிரிவினருக்கு 28 வயது மற்றும் SC/ST விண்ணப்பதாரர்கள் 30 வயது என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 10 மற்றும் 12ம் வகுப்புகளில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் பாடப்பிரிவுகளில் தேர்ச்சியும், B.Sc Graduate பட்டமும் முடித்திருக்க வேண்டும் மற்றும் பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாத ஊதியம் ரூ.35,544/- வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Laboratory Assistant பணிக்கு தகுதியான நபர்கள் Written Test மற்றும் Trade Test மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள். பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் தகுந்த சான்றிதழ்களுடன் விண்ணப்ப படிவத்தை அதிகாரப்பூர்வ முகவரிக்கு 04/03/2023 என்ற தேதிக்குள் தபால் அனுப்பி வைக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.