INDIGO நிறுவனத்தில் தற்போது Lead Cabin Attendant ATR பணிக்கு பல்வேறு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் விரைவாக இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.
INDIGO வேலைவாய்ப்பு:
தற்போது Lead Cabin Attendant ATR பணிக்கு பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக INDIGO நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு வயது வரம்பு குறைந்தபட்சம் 21 வயது இருக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் குறைந்தது 2 ஆண்டுகள் பணி சார்ந்த துறையில் பணியாற்றி இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாத ஊதியம் தகுதி மற்றும் திறன் அடிப்படையில் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
Lead Cabin Attendant ATR பணிக்கு தகுதியானவர்கள் Personal Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தின் மூலம் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து இறுதி தேதிக்குள் விரைவாக விண்ணப்பித்து பயன்பெறுமாறு தெரிவிக்கப்படுகிறது.