தேசிய கனிம வளர்ச்சி கழகம் (NMDC), General Medicine, Radiologist பணிகளுக்கு காலியிடங்கள் இருப்பதால் அதை நிரப்ப வேண்டி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும் வேலை குறித்த கூடுதல் தகவல்கள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன.
NMDC வேலைவாய்ப்பு:
தேசிய கனிம வளர்ச்சி கழகம் (NMDC) நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, General Medicine, Radiologist பணிகளுக்கு 6 காலியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு வயது வரம்பு அதிகபட்சம் 45 வயது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் அரசு அல்லது அரசு சார்ந்த பல்கலைக்கழகங்களில் பணி சம்பந்தப்பட்ட பிரிவில் MBBS with MD / DNB தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் பணியில் 4 முதல் 12 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும். இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.29.14 லட்சம் ஆண்டு ஊதியமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
மேலும் இந்த பணிக்கு தகுதியான நபர்கள் நேர்முகத் தேர்வின் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து தகுந்த சான்றிதழ்களுடன் பிப்ரவரி 17,20, 24 மற்றும் 26 ஆகிய தேதிகளில் நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையுமாறு தெரிவிக்கப்படுகிறது.