மக்களிடையே மிகவும் பிரபலம் பெற்ற Amazon நிறுவனம், Catalog Associate, Amazon Music பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் விரைவாக விண்ணப்பித்து பயன்பெறவும்.
Amazon வேலைவாய்ப்பு:
Amazon நிறுவனத்தில் Catalog Associate, Amazon Music ஆகிய பணிகளுக்கு பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு வயது வரம்பு பற்றி தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
மேலும் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Graduate பட்டம் பெற்றிருக்க வேண்டும் மற்றும் MS Office, Excel ஆகியவற்றை தெரிந்து வைத்திருக்க வேண்டும். இப்பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியம் அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
மேலும் இந்த பணிகளுக்கு தகுதியான நபர்கள் Personal Interview மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள். பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ தளத்தின் மூலம் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து ஆன்லைன் முறையில் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு தெரிவிக்கப்படுகிறது.