SBI Mutual Fund நிறுவனம், தற்போது Management Trainee பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு ஒரே ஒரு காலிப் பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பணி குறித்த கூடுதல் தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
SBI Mutual Fund வேலைவாய்ப்பு:
தற்போது Management Trainee பணிக்கு ஒரே ஒரு காலிப் பணியிடம் மட்டும் உள்ளதாக SBI Mutual Fund நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வயது வரம்பு பற்றிய தகவல்கள் தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
மேலும் இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் MBA & Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் பணியில் குறைந்தது ஒரு ஆண்டு காலம் அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாத ஊதியம் தகுதி மற்றும் திறமையை பொறுத்து அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
Management Trainee பணிக்கு தகுதி வாய்ந்த நபர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தின் மூலம் விரைவாக இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.