ESIC நிறுவனத்தை சேர்ந்த செவிலியர் கல்லூரி, தற்போது Part Time Teaching Faculty பணிக்கு பல்வேறு துறைகளில் காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் விரைவாக இறுதி நாள் முடியும் முன் விண்ணப்பித்து பயன்பெறவும்.
ESIC வேலைவாய்ப்பு:
ESIC நிறுவனத்தின் செவிலியர் கல்லூரி வெளியிட்ட அறிவிப்பில், Part Time Teaching Faculty பணிக்கு பல்வேறு துறைகளில் மொத்தம் 4 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு வயது வரம்பு 03/02/2023 தேதியின் 66 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
மேலும் இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் அரசு அல்லது அரசு சார்ந்த கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் பணி சம்பந்தப்பட்ட துறைகளில் Post Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் இப்பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு தியரி வகுப்புக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.400/- மற்றும் ப்ராக்டிகல் வகுப்புக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.200/- ஊதியமாக வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
Teaching Faculty பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் அவர்களின் கல்வி தகுதி மற்றும் பணி அனுபவம் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். பணிக்கு விண்ணப்பிக்க தகுதியுடைய நபர்கள் அதிகாரப்பூர்வ தளத்தின் மூலம் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து deanmc-gb.kar@esic.nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அறிவிப்பு வெளியான 14 நாட்களுக்குள் அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.