கன்னியாகுமரி மாவட்டம், மகளிர் திட்டம் / மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் கீழ் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. பணி குறித்த கூடுதல் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
தமிழக அரசு வேலைவாய்ப்பு:
வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் பணிக்கென்று 3 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு வயது வரம்பு அதிகபட்சம் 28 வயதாக இருக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Graduate முடித்திருக்க வேண்டும் மற்றும் 3 மாத காலம் MS Office பயின்றதற்கான சான்றிதழ் மிக அவசியமாகும். பணிக்கு தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு மாத ஊதியம் ரூ.12,000/- வழங்கப்படும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் பணிக்கு தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வு மற்றும் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தின் மூலம் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தகுந்த சான்றிதழ்களுடன் அலுவலக முகவரிக்கு நாளைக்குள் (10/02/2023) சென்று சேருமாறு விரைவு தபால் முறையிலோ அல்லது நேரிலோ சென்று விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.