சவுத் இந்தியன் வங்கி தற்போது National Head – Government Business பணிக்கு காலியாக உள்ள இடங்களை Post Graduate தேர்ச்சி பெற்றவர்களை கொண்டு நிரப்ப போவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆகையால் தகுதியுள்ளவர்கள் விரைவாக விண்ணப்பித்து பயன்பெறலாம்.
சவுத் இந்தியன் வங்கியின் வேலைவாய்ப்பு:
தற்போது National Head – Government Business பணிக்கென்று காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவது குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அறிவிப்பில் பணிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு வயது வரம்பு அதிகபட்சம் வயதானது 50 ஆக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு சார்ந்த கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் Post Graduate பட்டம் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாத ஊதியம் Scale IV/V அளவின் கீழ் வழங்கப்படும் என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
National Head பணிக்கு தகுதியானவர்கள் Shortlisting Interview மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள். பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் ரூ.100 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும் மற்றும் விண்ணப்பிக்கும் நபர்கள் www.southindianbank.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து தகுந்த சான்றிதழ்களுடன் ஆன்லைன் முறையில் விரைவாக விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.