பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் ( BEL ) Trainee Engineer – I, Project Engineer/Officer – I போன்ற பணிகளுக்கான காலியிடங்களை திறமையான மற்றும் தகுதியான நபர்களை கொண்டு நிரப்பும்படி அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது.
BEL நிறுவன வேலைவாய்ப்பு:
BEL நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Trainee Engineer – I, Project Engineer/Officer – I பணிகளுக்கு மொத்தமாக 27 காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு அதிகபட்ச வயதானது 28 மற்றும் 32 ஆக இருக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு சார்ந்த பல்கலைக்கழகங்களில் B.E, B.Tech, MBA, MSW, PGHRM in HR ஆகிய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு ரூ.30,000/- முதல் ரூ.55,000/- வரை மாத ஊதியம் அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
BEL நிறுவன பணிக்கு தகுதியுடைய நபர்கள் நேர்முகத்தேர்வு மற்றும் எழுத்துத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் . விண்ணப்பிப்பவர்களுக்கு விண்ணப்பக் கட்டணமாக Project Engineer பணிக்கு ரூ.472/- மற்றும் Trainee Engineer பணிக்கு ரூ.177/- வசூலிக்கப்படும் ,மற்றும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தின் மூலம் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிட்ட முகவரிக்கு 23/02/2023 தேதிக்குள் சென்று சேருமாறு விரைவு தபால் அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.