Dedicated Freight Corridor Corporation of India Limited தற்போது General Manager பதவிக்கு என்று ஒரே ஒரு காலிப்பணியிடம் உள்ளதால் அதை நிரப்புவது குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியுள்ள நபர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
DFCCIL வேலைவாய்ப்பு:
DFCCIL நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், General Manager பணிக்கென ஒரே ஒரு காலியிடம் மட்டும் ஒதுக்கப்பட்டு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வயதானது அதிகபட்சம் 55 ஆக இருக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Level 13 முதல் 14 அளவிலான ஊதியத்தில் மத்திய அல்லது மாநில அரசு அதிகாரியாக பணியாற்றியவர்களாக இருக்க வேண்டும் மற்றும் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு மாத ஊதியம் Parent pay plus deputation allowance அளிக்கப்படும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
General Manager பணிக்கு தகுதி வாய்ந்த நபர்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தின் மூலம் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அலுவலக முகவரிக்கு அறிவிப்பு வெளியான 15 நாட்களுக்குள் போதிய சான்றிதழ்களுடன் தபால் அனுப்புமாறு அறிவிக்கப்படுகிறது.