Canara Bank Securities Limited நிறுவனம், Deputy Manager, Assistant Manager ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதால் பணிக்கு தகுதியான மற்றும் ஆர்வமுள்ள நபர்களை கொண்டு நிரப்பும் பொருட்டு அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது.
Canara Bank வேலைவாய்ப்பு:
தற்போது Deputy Manager, Assistant Manager போன்ற பணிகளுக்கு மூன்று காலியிடங்கள் உள்ளதாக Canara Bank அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வயது வரம்பு குறைந்தபட்சம் 22 என்றும் அதிகபட்சம் 30 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் BE, B.Tech, MCA போன்ற ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.21,200/- முதல் ரூ.44,000/- வரை மாத ஊதியம் அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணிகளுக்கு தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் நேர்காணல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ தளத்தின் மூலம் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு 20/02/2023 என்ற தேதிக்குள் செல்லுமாறு தகுந்த சான்றிதழ்களுடன் தபால் அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.