பெரியார் பல்கலைக்கழகத்தில் Junior Research Fellow பணிக்கு ஒரே ஒரு காலிப் பணியிடம் மட்டும் இருப்பதாக ஆட்சேர்ப்பு அறிவிப்பு ஒன்றை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. பணி குறித்த கூடுதல் விவரங்கள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன.
பெரியார் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு:
Junior Research Fellow ( JRF ) பணிக்கென்று ஒரே ஒரு காலியிடம் மட்டுமே இருப்பதாக அறிவிப்பில் குறிப்பிட்டிருந்தது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு வயது வரம்பானது அதிகபட்சம் 28 ஆக இருக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் M.Sc in Physics அல்லது Material Science ஆகிய படிப்புகளில் 55% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு ரூ.31,000 வரை மாத ஊதியம் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
JRF பணிக்கு தகுதியான நபர்கள் நேர்முகத்தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு 15/02/2023 தேதிக்குள் விரைவாக அனுப்பி விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.