கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு மாநில கிராமப்புற வாழ்வாதார இயக்கத்தில் (TNSRLM) பெண்களுக்கான Block Coordinator பதவியில் பணிபுரிய ஆர்வம் உள்ளவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகி உள்ளது. மேலும் இப்பணிக்கென 3 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
TNSRLM-ன் வேலைவாய்ப்பு விவரங்கள்:
TNSRLM இயக்கத்தில் காலியாக உள்ள 3 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு அதன் மூலம் Block Coordinator பதவிக்கான காலிப்பணியிடத்தில் திறமையான பணியாளர்களை கொண்டு நிரப்பப்பட உள்ளது. மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 10.02.2023 என்ற தேதியின் படி 28 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் பெண்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் ஏதேனும் டிகிரி /Bsc computer science படிப்பில் தேர்ச்சியுடன் MS Office 3 மாத கால அனுபவ சான்றிதழ் மற்றும் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் இப்பணிக்கு TNSRLM இயக்கத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் பணியாளர்களுக்கு ரூ.12,000 மாத ஊதியமாக வழங்கப்படுகிறது.
Block Coordinator பணிக்கு விண்ணப்பிக்கும் பெண்கள் முதற்கட்டமாக எழுத்து தேர்வின் மூலம் 75%, இரண்டாம் கட்டமாக நேர்முகத் தேர்வின் மூலம் 25% தேர்ந்தெடுக்கப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவம் பெற்று, பூர்த்தி செய்த பின்பு தகுந்த ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 10.02.2023 என்ற தேதிக்குள் அனுப்பி விண்ணப்பித்து பயன்பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.