கள்ளக்குறிச்சி தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன், பருவகால பட்டியல் எழுத்தர், பருவகால உதவுபவர் மற்றும் பருவகால காவலர் ஆகிய பணிகளுக்கு காலியாக உள்ள இடங்களை நிரப்ப அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும் இப்பணிகளுக்கென 100 காலிப்பணியிடங்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
TNCSC வேலைவாய்ப்பு:
கள்ளக்குறிச்சி தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் வெளியிட்ட அறிவிப்பில் பருவகால பட்டியல் எழுத்தர், பருவகால உதவுபவர் மற்றும் பருவகால காவலர் போன்ற பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் பருவகால பட்டியல் எழுத்தர் பணிக்கு 20 காலியிடங்களும், பருவகால உதவுபவர் பணிக்கு 40 காலியிடங்களும், பருவகால காவலர் பணிக்கு 40 காலியிடங்களும் என்று மொத்தமாக 100 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும் இப்பணிகளுக்கு விண்ணப்பிப்போர் வயது வரம்பு குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 34 வயது என்று தெரிவித்துள்ளது மற்றும் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பருவகால உதவுபவர் பணிக்கு 12 ம் வகுப்பு தேர்ச்சியும், பருவகால பட்டியல் எழுத்தர் பணிக்கு B.Sc In Agriculture and Engineering பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இப்பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாத ஊதியம் பருவகால பட்டியல் எழுத்தர் பணிக்கு ரூ. 5,285/- + ரூ. 3,499 /– , பருவகால உதவுபவர் பணிக்கு ரூ. 5,218/- + ரூ. 3,499 /– , பருவகால காவலர் பணிக்கு ரூ. 5,218/- + ரூ. 3,499 /– வழங்கப்படும்.
மேலும் இந்த பணிக்கு கள்ளக்குறிச்சி மாவட்டத்தை இருப்பிடமாகக் கொண்ட விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 07/02/2023 என்ற தேதிக்குள் அலுவலக முகவரிக்கு வந்து சேருமாறு தபால் அனுப்பி வைக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.