TNRTP வேலைவாய்ப்பு:
TNRTP ஆணையம் தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில், Project Executive, Young Professional, District Executive Officer, Executive Officer, Block Team Leader உள்ளிட்ட பணிகளுக்கு என 97 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு ஏற்ப 28 வயது முதல் 53 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அனுமதி பெற்ற கல்லூரிகளில் ICWA, Bachelor’s Degree, Masters Degree தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். இப்பணிகளுக்கென்று தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பணியை பொறுத்து ரூ.20,000/- முதல் ரூ.1,25,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் நேர்முக தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள் எனவும் இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை ஆன்லைன் முறையில் இறுதிநாளான 02/03/2023 தேதிக்குள் பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.