தமிழக அரசின் Public Works Department (PWD) ஆனது Graduate Apprentices, Technician Apprentices (Diploma) பணியிடங்கள் காலியாக இருப்பதற்கான அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிகளுக்கு என மொத்தமாக 500 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN PWD வேலைவாய்ப்பு:
TN Public Works Department (PWD) வெளியிட்ட அறிவிப்பின்படி, Graduate Apprentices மற்றும் Technician Apprentices (Diploma) பணிகளுக்கு என ஒட்டுமொத்தமாக 500 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் வயது வரம்பு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ பக்கத்தில் கண்டு தெரிந்துகொள்ளலாம்.
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் Engineering அல்லது Technology பாடப்பிரிவில் Degree / Diploma முடித்திருக்க வேண்டும். இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு Graduate Apprentices பணிக்கு ரூ.9,000/- என்றும், Technician Apprentices பணிக்கு ரூ.8,000/- என்றும் மாத உதவித் தொகையாக வழங்கப்படும் என இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Apprentices பணிக்கு தகுதியான நபர்கள் Shortlisting மற்றும் சான்றிதழ் சரிபார்த்தல் மூலம் நியமனம் செய்யப்பட உள்ளனர். இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள இணையதளம் மூலமாக தங்களது விண்ணப்பங்களை இறுதி நாளுக்குள் (31/03/2023) ஆன்லைன் முறையில் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.