பஞ்சாப் & சிந்த் வங்கியில் காலியாக உள்ள IT Consultant பணிக்கான 01 பணியிடத்தை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இறுதி நாளுக்கு முன் விண்ணப்பித்து பயன்பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
பஞ்சாப் & சிந்த் வங்கி வேலைவாய்ப்பு:
IT Consultant பணிக்கென்று ஒரே ஒரு காலியிடம் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளதாக பஞ்சாப் & சிந்த் வங்கி தற்போது வெளியிட்டிருந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வயது வரம்பு 01/01/2023 என்ற தேதியின்படி அதிகபட்சம் 64 வயதாக இருக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அனுமதி பெற்ற பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Graduate Degree முடித்தவராகவும், குறைந்தது 10 ஆண்டுகள் பணியில் முன் அனுபவம் பெற்றவராகவும் இருக்க வேண்டும். இப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மாத ஊதியம் பஞ்சாப் & சிந்த் வங்கியின் விதிமுறைப்படி அளிக்கப்படும் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பஞ்சாப் & சிந்த் வங்கி பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (04/03/2023) விரைவு தபால் மூலம் தலைமை அலுவலக முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.