இந்திய வருமான வரித்துறை ஆனது Income Tax Inspector, Tax Assistant, Multi-Tasking Staff ஆகிய பணிகளுக்கென்று ஒதுக்கப்பட்டுள்ள 20 பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த மத்திய அரசு பணிகள் குறித்த தகவல்கள் அனைத்தும் கீழே எளிமையான முறையில் தொகுக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு வேலைவாய்ப்பு:
Income Tax Inspector, Tax Assistant, Multi-Tasking Staff உள்ளிட்ட பணிகளுக்கென 20 பணியிடங்கள் காலியாக இருப்பதாக வருமான வரித்துறையின் வேலைவாய்ப்பு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வயது வரம்பானது பணியின் அடிப்படையில் குறைந்தபட்சமாக 18 என்றும், அதிகபட்சமாக 30 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 10 ஆம் வகுப்பு, Bachelor’s Degree முடித்திருக்க வேண்டும். இப்பணிகளுக்கு என்று தேர்தெடுக்கப்படும் நபர்களுக்கு மாத ஊதியம் பணியை பொறுத்து குறைந்தபட்சம் ரூ.18,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,42,400/- வரை வழங்கப்பட உள்ளதாக இந்த அறிவிப்பில கூறப்பட்டுள்ளது.
மத்திய அரசு பணிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆவண சரிபார்ப்பு, சோதனைகள் மற்றும் எழுத்து தேர்வு மூலமாக நியமனம் செய்யப்படுவார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு இறுதி நாள் (17/03/2023) முடியும் முன் விரைவு தபால் மூலம் அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.