Central Bank Of India ஆனது Faculty, In charge of FLCC ஆகிய பணிகளுக்கென பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதால் அவ்விடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த வங்கியில் பணிபுரிய விரும்புபவர்கள் விரைவாக இப்பணிக்கு விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
Central Bank Of India வேலைவாய்ப்பு:
Faculty, In charge of FLCC ஆகிய பணிகளுக்கென்று பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக Central Bank Of India வங்கியில் இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அதிகபட்சமாக 65 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும் என்று இந்த அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் Graduate/ Post Graduate / MSW / MA / B.Ed / BA / B.Sc ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். In charge of FLCC பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் குறைந்தது 15 ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகள் வரை பணி சார்ந்த துறையில் முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த Central Bank Of India பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மாதம் ரூ.15,000/- முதல் ரூ.20,000/- வரை ஊதியமாக வழங்கப்பட உள்ளது.
இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் (06/03/2023) தபால் மூலம் அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.