கோயம்புத்தூர் மாவட்ட மத்திய சிறையில் காலியாக உள்ள இரவுக்காவலர் பணியிடத்தை நிரப்புவது குறித்து அதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இரவுக்காவலர் வேலைவாய்ப்பு:
தற்போது வெளியிடப்பட்ட அறிவிப்பில், கோயம்புத்தூர் மாவட்ட மத்திய சிறையில் இரவுக்காவலர் பணிக்கென்று ஒரே ஒரு காலியிடம் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வயது வரம்பானது 01/07/2022 என்ற தேதியின்படி, 32 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் இரவுக்காவலர் பணியில் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கூடுதல் தகவலை அறிவிப்பில் காணலாம். இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாத ஊதியம் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் அளிக்கப்படும்.
இரவுக்காவலர் பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வின் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் தங்களது சான்றிதழ்களை அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 28.2.2023 என்ற இறுதி தேதிக்கு முன் அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.