தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (TNPSC) அமைப்பானது நாள்தோறும் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டு அதன் மூலம் வேலையில்லா நபர்களுக்கான வேலைவாய்ப்பை அளித்து வருகிறது. அதன்படி தற்போது TNPSC அமைப்பானது Tourist Officer பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த பணியிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் விருப்பம் உள்ள நபர்கள் இந்த பதிவின் மூலம் பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொண்டு பயன் பெறுங்கள்.
TNPSC வேலைவாய்ப்பு விவரங்கள்:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமானது (TNPSC) தற்போது 2023 ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டு அதன் மூலம் Tourist Officer பதவிக்கான காலிப்பணியிடத்தை நிரப்ப உள்ளது. மேலும் TNPSC தேர்வாணையத்தில் தற்போது காலியாக உள்ள 3 காலிப்பணியிடங்கள் தகுந்த பணியாளர்களை கொண்டு நிரப்பப்பட உள்ளது. இந்த நிலையில் Tourist Officer பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்களின் வயதானது 01.07.2022 தேதியின் படி, SCs, SC(A)s, STs, MBCs/DCs, BC பிரிவை சேர்ந்தவர்கள் 18 வயதுக்குள்ளும் மற்ற பிரிவினை சேர்ந்தவர்கள் 18 முதல் 32 வயதுக்குள்ளும் இருப்பது கட்டாயம்.
இந்நிலையில் இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அரசால் அங்கீகரிப்பட்ட கல்வி நிறுவனங்களில் PG Tourism, M.Phil Tourism, Diploma In Tourism, PG Tourism-ல் Any subject of Tourism போன்ற பணி சார்ந்த துறைகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேற்கூறிய தகுதிகளை பெற்று தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு அவர்களின் தகுதியின் அடிப்படையில் மாதம் ரூ.56,100 முதல் ரூ.2,05,700 வரை ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்பணிக்கு மேற்கண்ட தகுதிகளை பெற்ற ஆர்வம் மற்றும் விருப்பம் உள்ள நபர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இந்நிலையில் எழுத்து தேர்வானது 10.06.2023 – 11.06.2023 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. மேலும் இப்பணிக்கு எழுத்து தேர்வுக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.200மும், ஒரு முறை பதிவு கட்டணம் ரூ.150 ஆகும் (5 வருடங்களுக்கு செல்லுபடியாகும்). இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள “Apply Online” என்ற இணையத்தள லிங்க் மூலம் 25.01.2023 முதல் 23.02.2023 என்ற தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.