திருவனந்தபுரத்தில் உள்ள மத்திய மறைமுக மற்றும் சுங்க வரிகள் வாரியம், தற்போது Tax Assistant, Stenographer உள்ளிட்ட பல பணிகளுக்கு காலியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் இப்பணிகளுக்கான கல்வித் தகுதி, வயது, போன்ற தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
CBIC வேலைவாய்ப்பு:
CBIC வாரியத்தின் திருவனந்தபுரம் கிளையானது, Tax Assistant, Stenographer, Havaldar மற்றும் Canteen Attendant உள்ளிட்ட பணிகளுக்கு காலியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிகாரபூர்வ அறிவிப்பின் படி, Tax Assistant பணிக்கு ஒரு காலியிடமும், Stenographer பணிக்கு ஒரு காலியிடமும், Canteen Attendant பணிக்கு ஒரு காலியிடமும் மற்றும் Havaldar பணிக்கு ஐந்து காலியிடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் இப்பணிக்கு விண்ணப்பிப்போர்களுக்கு 15.02.2023 தேதியின் படி வயது வரம்பு குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 27 ஆக இருக்கவேண்டும்.
மேலும் Tax Assistant பணிக்கு அரசு சார்ந்த கல்லூரிகளில் டிகிரி முடித்தவர்களாகவும், Stenographer பணிக்கு அரசு சார்ந்த கல்வி நிலையங்களில் 12 வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும் மற்றும் Havaldar, Canteen Attendant பணிகளுக்கு 10 வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும் இருக்கவேண்டும். மேலும் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு மாத ஊதியமாக Tax Assistant மற்றும் Stenographer பணிகளுக்கு ரூ.25,500 முதல் ரூ.81,100 வரையும், Havaldar மற்றும் Canteen Attendant பணிகளுக்கு ரூ.18,000 முதல் ரூ.56,900 வரையும் வழங்கப்படும்.
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தங்களது விண்ணப்பங்களை அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள அலுவலக முகவரிக்கு நேரிலோ அல்லது 15.02.2023 தேதிக்குள் சென்றடையும் வகையில் தபால் முறையிலோ அனுப்புமாறு தெரிவிக்கப்படுகிறது. இதன் மூலம் தேர்வு செய்யப்படுபவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.