இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR ) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக தற்போது அந்த நிறுவனம் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள 2 பணியிடங்களில் Research Assistant பதவிக்கு, தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணி அமர்த்தப்பட உள்ளனர்.
ICMR வேலைவாய்ப்பு:
Research Assistant பதவிக்கு தகுந்த பணியாளர்களை தேர்ந்தெடுக்கும் பொருட்டு ICMR நிறுவனம் தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு அதன் மூலம் வேலையில்லா மற்றும் திறமை வாய்ந்த நபர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்க உள்ளது. மேலும் இந்த பணிக்கு 2 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் அதிகபட்ச வயதானது 30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் 2 வருடம் பணி சார்ந்த துறைகளில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேற்கண்ட தகுதிகளை பெற்ற, ICMR நிறுவனத்தால் தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்களுக்கு மாத ஊதியமாக ரூ.31,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் நேர்முகத் தேர்வு செய்யப்பட்டு அதன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். மேலும் ICMR நிறுவனத்தில் பணியாற்ற ஆர்வம் மற்றும் விருப்பம் உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ பக்கத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பெற்று, பூர்த்தி செய்து பின்பு தகுந்த ஆவணங்களுடன் 17.02.2023 அன்று நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.