Asst Acquisition Manager பதவிக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை KMBL வங்கியானது வெளியிட்டுள்ளது. மேலும் இந்த பதவிக்காக பல்வேறு காலிப் பணியிடம் ஒதுக்கப்பட்டு தகுதி மற்றும் திறமை வாய்ந்த பணியாளர்கள் பணி அமர்த்தப்பட உள்ளனர். இப்பணி குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவின் மூலம் கண்டு கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு அறிவிப்பு விவரங்கள்:
Kotak Mahindra Bank Ltd.( KMBL) வங்கியானது 2023 ஆண்டிற்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக Asst.Acquisition Manager பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது. மேலும் KMBL வங்கியில் பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு தகுதி வாய்ந்த பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்கள்.
மேலும் இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இப்பணிக்கு அனுபவம் இல்லாதவர்கள் மற்றும் முன்னனுபவம் உள்ளவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவார்கள். மேலும், வங்கி தொடர்பான சேல்ஸில் முன் அனுபவம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்கண்ட தகுதிகளை பெற்ற நபர்கள் அதிகாரபூர்வ தளத்தில் உள்ள படிவத்தை பெற்று பூர்த்தி செய்த பின்பு, அதிகாரபூர்வ தளத்தில் உள்ள முகவரிக்கு கடைசி நாளுக்குள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இப்பணி குறித்த கூடுதல் தகவல்களை பெறுவதற்கு அதிகாரபூர்வ தளத்தை பார்வையிடவும்.