இரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் நிறுவனம் தற்போது, Addl. General Manager மற்றும் Joint General Manager பதவிகளுக்கு காலியிடங்கள் உள்ளதால் அதை நிரப்ப வேண்டி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் விரைவாக விண்ணப்பித்து பயன்பெறவும். மேலும் இதனை பற்றிய கூடுதல் தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
RVNL வேலைவாய்ப்பு :
தற்போது இரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் , Addl. General Manager , Joint General Manager மற்றும் SR. Deputy General Manager உள்ளிட்ட பதவிகளுக்கு இரண்டு காலியிடங்கள் இருப்பதாக அறிவித்துள்ளது. மேலும் இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு வயது வரம்பு அதிகபட்சம் 56 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் AGM பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் LEVEL 13-A (CDA)/ IDA E-7 (ரூ.1,00,000 முதல் ரூ.2,60,000 வரை) மாத ஊதியமும், JGM பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் LEVEL-13(CDA)/ IDA E-6 (ரூ.90,000 முதல் ரூ.2,40,000 வரை) மாத ஊதியமும் மற்றும் SR. DGM பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் Level-12(CDA)/ IDA E-5 (ரூ.80,000 முதல் ரூ.2,20,000 வரை) மாத ஊதியமும் பெற்றவர்களாக இருக்க வேண்டும் மற்றும் இந்த பணிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு Parent Pay உடன் Deputation Allowances மாத ஊதியமாக வழங்கப்படும்.
மேலும் Manager பணிக்கு தகுதியுள்ள நபர்கள் ( Deputation ) தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரபூர்வ தளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தகுந்த சான்றிதழ்களுடன் amit.kumar3@rvnl.org என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அறிவிப்பு வெளிவந்த 30 நாட்களுக்குள் அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.