Apprentices பயிற்சி வகுப்பிற்கான அறிவிப்பு ஒன்றை இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனமானது வெளியிட்டுள்ளது. மேலும் ஊக்கத்தொகையுடன் கூடிய இந்த பயிற்சி வகுப்பு குறித்த முழுவிவரங்களை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொண்டு பயன் பெறுங்கள்.
அறிவிப்பு விவரங்கள்:
பொறியியல் பட்டதாரிகள் மற்றும் டிப்ளமோ முடித்தவர்களுக்காக தொழிற் பயிற்சி நிறுவனமானது, HAL தேசிய தொழிற்பயிற்சி திட்டத்தின் (NATS) கீழ் ஊக்கத்தொகையுடன் கூடிய பயிற்சி வகுப்பிற்கான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. எனவே தொழிற்பயிற்சி நிறுவனமானது தென்மண்டல வாரியத்தின் மூலம் (BoAT) ஓராண்டு Apprentices பயிற்சி வகுப்பு நடத்த இருக்கிறது.
மேலும் இந்த பயிற்சி வகுப்பில் சேர்வதற்கு விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் 01.05.2020 மற்றும் அதற்கு பின் இந்தியாவில் உள்ள அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் BE /Diploma பட்டங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த பயிற்சி வகுப்பில் ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும். மேற்கண்ட பயிற்சி வகுப்பில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பணி அனுபவம் பெற்றவர்களால் விண்ணப்பிக்க முடியாது. மேலும் இந்த பயிற்சி வகுப்பிற்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சி வகுப்பிற்கான நேர்காணல் 02/02/2023, 03/02/2023 மற்றும் 04/02/2023 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கிறது.
இந்நிலையில் இப்பயிற்சி வகுப்பில் தேர்ந்தெடுக்கப்படும் BE பட்டதாரிகளுக்கு ரூ.9,000 மும் , டிப்ளமோ டெக்னீசியன் அப்ரண்டிஸ் பணிக்கு ரூ.8,000மும் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள ஆர்வம் உள்ள தகுதி வாய்ந்த நபர்கள் 2/02/2023, 03/02/2023 மற்றும் 04/02/2023 ஆகிய தேதிகளில் நடைபெறும் நேர்காணலுக்கு தகுந்த ஆவணங்களுடன் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.