RITES லிமிடெட் நிறுவனம் தற்போது, Solid Waste Expert மற்றும் Used Water Waste Expert உள்ளிட்ட பணிகளுக்கு காலியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. எனவே இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியுள்ள நபர்கள் இறுதித் தேதிக்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு தெரிவிக்கப்படுகிறது. மேலும் பணி குறித்த விவரங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளன.
RITES நிறுவன வேலைவாய்ப்பு:
இரயில் இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை நிறுவனம் தற்போது , Solid Waste Expert, Used Water Waste Expert, Senior Expert மற்றும் Senior Procurement Specialist உள்ளிட்ட பணிகளுக்கு மொத்தம் 10 காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு வயது வரம்பு 01 /02 /2023 தேதியின் படி 63 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் அரசு அல்லது அரசு சார்ந்த கல்லூரி / பல்கலைக்கழகங்களில் M.Tech, M.E (Environmental), MBA அல்லது B.E பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றும், பணிகளுக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியம் அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
இப்பணிகளுக்கு தகுதிவாய்ந்த நபர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விண்ணப்பிக்க தகுதியுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து நிறுவனத்தின் அதிகாரபூர்வ மின்னஞ்சலுக்கு தகுந்த சான்றிதழ்களுடன், அறிவிப்பு வெளியான 15 நாட்களுக்குள் அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.